
கலைஞர் உதயகுமார்
இலங்கைத் தமிழ் நாடக உலக வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் கலாபூஷணம்.கலைஞர் உதயகுமார்ஈழத் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய நட்சத்திரங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர். 72 வயதான, இப்போதும் மகிழ்ச்சியாக தொழில் செய்து கொண்டிருக்கும் உதயகுமார் 13 வயதில் நடிப்புலகுக்கு வந்து கடினமான முட்பாதைகளில் கலைத்தாகத்துடன் நடைபயின்று நாடக, சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்தவர். இப்போதும் இவர் சிந்தனை நாடகம் நடிப்பு என்றுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவரது வாழ்க்கை ஈழத்து நாடக உலகுடன் ஒட்டிச்சென்றிருப்பதால், இவரது வாழ்க்கை பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. இவர், தான் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாகக் கூறுவது நடிப்பல்ல என்பதைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
‘எங்கள் ஊரில் புங்க மரம் அதிகமாகக் காணப்படும். அதனால் தான் எங்க ஊரை புங்குடுதீவு என்று அழைத்தார்கள். என் அப்பா பெயர் பிலிப். அம்மா பெயர் எலிஸபெத்.
எட்டு வயசு வரைக்கும் நான் புங்குடுதீவில்தான் இருந்தேன். எனது ஆரம்ப கல்வி புங்குடிதீவில்தான் ஆரம்பித்தது. முதல் முதலாக நான் பாடசாலைக்கு சொன்றது இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. அக்கா லெயொனிதான் என்னைப் பாடசாலைக்கு அழைத்து போனா. அங்கே போன எனக்கு அது புது இடமாகஇருப்பதால் அங்கு இருக்க பிடிக்கவில்லை. அக்காவுடன் வந்து விட அழுது அடம்பிடித்தேன். அப்போது அந்த பள்ளியின் ஆசிரியையாக இருந்த ரெஜினா என்னை பிரம்பை காட்டி மிரட்டி வகுப்பில் அமர வைத்தார்.
முத்துராமன் செல்லசாமி இருவருக்கும் மத்தியில் உதயகுமார்.
அதற்கு பிறகு அக்கா போயிட்டா. நான் என் வீட்டையும், என் பெற்றோர் அக்கா சுகோதரர்களையும் நினைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன். இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாதோ என்ற பயம் எனக்கு. பிறகு பள்ளி வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது.
எனது நண்பர்களான சாமிநாதன், விக்டர், பாலந்த, திருச்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பாடசாலைக்கு பக்கத்திலிருந்த எலும்புருக்கி பூவை பறித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...” என்று தனது பள்ளி வாழ்க்கையைப் பற்றி மேலும் கூறத் தொடங்கினார் உதயகுமார்.
“குருவியை பிடித்து பொரித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். குருவி பிடிக்க முதல் நாளே கண்ணி செய்து வைத்து விடுவோம். மாட்டு வால் மயிரை பிடுங்கி எடுத்து அதில் முடிச்சு போட்டி சுருக்கு கயிறு செய்வோம். அதை ஈக்கில் குச்சியில் கட்டி வைத்துக் கொள்வோம்.
இது தான் நாங்கள் தயாரிக்கும் கண்ணி. அந்தக் காலத்தில் இப்போது போல் நைலான் கயிறு இல்லை. அதனால் தான் மாட்டு வால் மயிரை பிடுங்கி சுறுக்கி கயிறு செய்தோம். செய்த கண்ணியை ஸ்கூல் பேக்கில் வைத்து எடுத்துக் கொண்டு போய் வழியில் எங்காவது மறைத்து வைத்து விடுவோம். ஸ்கூல் முடிந்து வரும்போது குருவி வேட்டையை தொடங்கிடுவோம்.
உதயகுமார் (இரண்டாவது), ஏ.எஸ். ராஜா மற்றும் கிங்ஸ்லி செல்லையா, அமர்ந்திருப்பவர்களில் வலது பக்கம் மஞ்சள் குங்குமம் தயாரிப்பாளர் சுந்தரேச ஷர்மா.
நாங்கள் விரும்பிப் பிடிப்பது ஆள்காட்டி குருவிதான். நாங்கள் வைக்கும் கண்ணியில் ஏமாளியாக மாட்டிக் கொள்வதும் அந்தக் குருவிதான். பிடித்த குருவிகளை உரித்து மசால பொடி, உப்புத்தூள் தூவி பொரித்தெடுத்து சாப்பிடுவது எனக்கு பொழுதுபோக்கு. நொட்டான்குருவி என்ற ஒரு பையன் எங்கள் ஊரில் இருந்தான். அவனின் நிஜப்பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. அவன் எங்களோடு குருவி வேட்டைக்கு வருவான்.
நொட்டான் குருவியை அவன் தேடிப்பிடித்து வேட்டையாடுவதால் அவனுக்கு நொட்டான் குருவி என்று பெயர். புங்குடுதீவு கடலில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து போகலாம். முழங்கால் அளவுதான் தண்ணீர் இருக்கும்.
அங்கே நடந்து சென்றால் நிறைய பாறைகள் இருக்கும். அதன் இடுக்குகளில் விலாமீன், கலவாய், கருவாய் போன்ற மீன்கள் இருக்கும். அங்கே வலைப்போட்டு மீன்களை பிடிப்போம். அதற்கு பார்வலைதல் என்று சொல்லுவார்கள்.
இதில் கலவாய் மீனில் ஒடியல் மா போட்டு கூழ் காய்ச்சி சாப்பிடுவோம். ரொம்பவும் ருசியாக இருக்கும். கடல் தண்ணீருக்குள் இருக்கும் கடல் தாமரையை குத்தி எடுத்து சாப்பிவோடும்.
அப்புறம் கடலில் கிடைக்கும் தாலங்காயை எடுத்து அவித்து சாப்பிடவேண்டும். இப்படியான புங்குடு தீவு உணவுகளை சாப்பிட்டு வளர்ந்ததால் தான் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன்” என்று நெஞ்சு நிமித்துகிறார் கலைஞர் உதயகுமார்.
சின்ன வயதிலேயே ரொம்பவும் யோசித்துக் கொண்டிருப்பாராம். அப்படி பாடசாலையில் தீவிரமாக இவர் யோசிக்கும் போது நடந்த சம்பவத்தை விபரிக்கிறார்.
“புங்குடுதீவு தமிழ்பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் வகுப்பில் ஏதோ ஒரு யோசனையில் நான் ஆழ்ந்திருந்த போது ரெஜீனா டீச்சர் என்னருகில் வந்து ‘ஆதாம், ஏவளைத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான் ‘ஆதாமைத் தெரியும், வரும் வழியில் தான் புல் வெட்டிக் கொண்டிருக்கிறார். என்று பதில் சென்னதும் வகுப்பே சிரிப்பில் ஆழ்ந்தது. எனக்கு அப்போது தான் விசயமே புரிந்தது! ஆசிரியை கேட்டதோ முதல் மனிதன் ஆதாமை! உணர்ந்ததும்-வெட்கத்தால் கூனிக் குறுகி விட்டேன். என்னுடைய நிஜப் பெயர் மைக்கல். வீட்டுல என்னை மைக் என்றுதான் கூப்பிடுவார்கள்.
அப்பா கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்தார். மாதத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். அதனால் அப்பாவுடன் எனக்கு நெருக்கமில்லை. எனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டுதான் செல்வேன். அம்மாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டுத்தான் என் முதல் காதலை துறந்து விட்டு அம்மா சுட்டிக்காட்டிய பெண்ணை மணந்தேன் என்று தனது முதல் காதலை நினைத்து கவலைப்படும் உதயகுமார், அந்த நி¨வுகளுக்கு எம்மை அழைத்துச் செல்கிறார். கொழும்பு ரட்ணம் வீதியில் நாங்கள் வசித்து வந்தோம். எங்கள் வீட்டுக்கு ஒரு நாலு வீடு தள்ளித்தான் என் கனவு கன்னியின் வீடு. அவளின் பெயர் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் பாடசாலை விட்டு வரும்போது வாசலில் நிற்பா.
என்னையே பார்த்துக் கொண்டிருப்பா. நானும் பார்ப்பேன் அவளின் கண்கள் ஏதோதோ பேசும். நாட்கள் செல்லச் செல்ல அவள் அந்த பாதையோரத்தில் உள்ள தண்ணீர் குழாயடிக்கு வந்து நான் வரும் சமயத்தில் குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருப்பா. எனக்கு அவ்விடத்தில் வரும்போதுதான் தாகம் எடுக்கும்! ஆரம்பத்தில் அவளிடம் தண்ணீர் வாங்கி குடிக்கும் போது கைகள் நடுங்கின. பிறகு அது பழகி விட்டது. அதற்கு பிறகு நான் வரும்போது அவள் தண்ணீர் குடத்துடன் எனக்கு தண்ணீர் கொடுக்க ஆயத்தமாக இருப்பா! அவள் குடத்திலிருந்து தண்ணீரை கீழே ஊற்ற நான் குனிந்து இரண்டு கைகளையும் குவித்து நீர் பருகுவேன். அந்தத் தண்ணீர் அவ்வளவு ருசி. அவ்வளவு ருசியான தண்ணீரைப் பின்னர் அருந்தியதே இல்லை.
சும்மாவா சொன்னான் கவிஞன், பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்; நீ பாதி தின்று தந்ததால் லட்சம் ரூபாய் என்று. பிறகு அம்மாவுக்கு இந்த விடயம் தெரிய வர என்னை அவசரமாக மன்னாருக்கு அழைத்துச் சென்றார். அங்கே எனக்கும் பஞ்சமணி என்ற பெண்னுக்கும் திருமணப் பதிவு நடைபெற்றது.
அம்மா சொன்னதால் நான் மறுக்காது பதிவுத் திருமணத்திற்கு சம்மதித்தேன். அதன் பிறகு குழாயடிக் கன்னியை நான் காணவில்லை. அவளுக்கு விசயம் தெரிந்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவள் என்னைப் பார்ப்பதை தவிர்த்து விட்டாள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.
இப்போது அவள் எங்கே யிருக்கிறாளோ...! பெருமூச்சு விடுகிறார் உதயகுமார். புங் குடு தீவிலிருந்து கொழும்பு வந்ததும் விவேகானந்த மேட்டிலுள்ள சென் அந்தனீஸ் பாடசாலையில்தான் படித் தேன். பந்து விளையாடுவ தற்காக நண்பர்களுடன் சேர் ந்து கொண்டு ஜிந்துபிட்டி மைதானத்திற்கு செல்வேன். அப்படிப்போகும் போது அங்கே ஜிந்துபிட்டி சந்தி யில், மனோரஞ்சித கான சபாவில் நாடகம் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். கே.பி. ராஜேந்திர மாஸ் டர்தான் கலைஞர்களை இயக்கி கொண்டிருப்பார்.
நான் அந்த அறையின் கதவு ஓரத்தில் நின்று வேடி க்கை பார்த்துக் கெண்டிருப் பேன். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் வரப்பிரகாசம் என்ற கலைஞர் எண்ணப் பார்த்து, ‘நீ நல்ல வடிவாகத்தான் இருக்கிற.... நாடகத்தில் நடிக் கிறியா?’ என்றார். நானும் உடனே சம்மதித்து விட் டேன். அதன் பிறகு எனது நாடக பயணம் தொடர்ந் தது” என்று சொல்லும் உதயகுமார் தம்மோடு நடித்த சக நடிகர்கள் தொடர்பான ஞாபகத்தையும் பதிவு செய்கிறார்.
‘தமிழகத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆரம்பத்தில் இங்கேதான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள எலிஸ்டொப் பிளேசில் ஒரு லொண்டரி இருந்தது. அங்கே எடு பிடி வேலை செய்து கொண்டிருந்தார் சந்திரன். லொன்றிக்கு எதிரே உள்ள பாய்வீட்டில் மோகன் என்பவர் வேலை செய்தார். இவர் ஒரு நாடக கலைஞரும் கூட. அவர்தான் சந்திரனுக்கு மூன்று வேளையும் சாப்பாடு தருவார். அதை சாப்பிட்டுவிட்டு அந்த லொண்டரியிலேயே தங்கிவிடுவார். அப்போதுதான் எனக்கு சந்திரன் பழக்கமானார். பிறகு சந்திரன் சிங்கள சினிமாவின் ஒளிப்பதிவாளராக இருந்த லெனின் மொராயஸ்சின் உதவியோடு விஜயா ஸ்டுயோவில் லைட் போயாக வேலை செய்தார். சந்திரனும் நானும் நடித்த ‘கலிங்கத்து கைதி’ நாடகம் புத்தளம் நுரைச்சோலையில் மேடையேறியது. அப்போது நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.
தன் சகோதரியுடன்
நாடகத்தில் நான் ராஜ குருவாகவும், சந்திரன் சிஷ் யனாகவும் நடித்தோம். ஒரு காட்சியில் நான் சிஷ்ய னைப் பார்த்து ‘சிஷ்யா! நமது அரண்மனைக்குள் எதிரிகள் ஊடுருவி இரு க்கிறார்கள்” என்றேன்.
அத ற்கு சந்திரன் ‘அப்படியா குருவே! எந்த ரூமில் அவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லுங்கள் அவர்களை பினிஷ் பன்னி விடுகிறேன்” என்றார் சரித்திர நாடக வசனத்தில் ஆங்கிலம் கலந்து விட்டதை உணர்ந்த நான் நிலைமையை சமாளிக்க சாதுரியமாக “ஆங்கிலயர்கள் நம் அரண்மனைக்குள் அடிக்கடி வந்து பேவதால் நீயும் தமிழோடு ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டயா?” என்று இட்டுக் கட்டினேன். நாடகம் முடிந்ததும் ராஜேந்திரன் மாஸ்டருக்கு ஆத்திரம் தாங் காமல் எஸ்.எஸ். சந்திரனுக்கு பிரம்பால் விளாசித் தள்ளி னார். ‘எப்படி சார் என்னு டைய சமாளிப்பு? என்று நான் புத்திசாலி தனமாக பேசியதாக நினைத்து மாஸ்டரிடம் கேட்டேன். மாஸ்டருக்கு ஆத்திரம் மேலும் அதிகமாகியது.
அவனுக்குத்தான் அறி வில்லை எண்டா உனக்கு எங்கேடா போச்சு புத்தி? இந்த கதை நடந்தாக சொல் லப்படும் காலத்தில் வெள் ளக்காரன் எங்கேடா இந்தி யாவிற்குள் வந்தான்?’ என் றார் அன்றிரவு எஸ்.எஸ். சந் திரனை அறைக்கு வெளியே போட்டு கதவைச் சாத்திவிட் டார். பாவம் சந்திரன்! அன் றிரவு முழுவதும் அறைக்கு வெளியேதான் படுத்திருந்தார்.
சிறிது காலத்தின் பின் அவர் இந்தியாவுக்கு சென்று விட்டார். ஒரு நாள் சந்திரன் எனக்கு போஸ்காட் அனுப் பியிருந்தார். அதில் மெரினா பீச்சில் நான் கடலை விற்கி றேன். உங்களுக்கு அனுப் பியிருக்கும் போஸ்ட் காட் செலவில் இங்கே ஒரு வேளை சாப்பாடு சாப்பிட லாம். எப்படியாவது நான் முன்னுக்கு வருவேன்’ என்று நம்பிக்கையோடு எழுதியிருந்தார். எஸ்.எஸ். சந்திரனை கொழும்பு லொண்டரியில் சந்திக்க போகும் போதெல் லாம் நீதிமன்றத்துக்கு பக்கத் திலிருந்த இக்பால் ஹோட் டலில் ஆட்டுக்கால் சூப் பானோடு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந் தேன். இப்போது அந்த ஹோட்டல் லொண்டரி, என்று எதையுமே அங்கு காணமுடியவில்லை. காலம் வேமாக ஓடிக் கொண்டிருக் கிறது என்பது மட்டும் புரிகிறது” என்கிறார் கலைஞர் உதயகுமார்.
திருமணம் எங்கே நடை பெற்றது? என்று கேட்டோம்.
“1964ல் தான் எனது திரு மணம் நடைபெற்றது. அப் போது எனக்கு இருபத்தி நான்கு வயது. புங்குடுதீவு புனித சவோரியார் ஆலய த்தில் பாதர் ஸ்டீபன் தலை மையில் நடைபெற்றது. ஊர்ப் பெரியவர்கள் வந்திரு ந்தார்கள். யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இருந்த ஞானம் ஸ்டூடியோ வில்தான் திருமண போட்டோ எடுத்தோம். அந்த ஸ்டு டியோ இப்போ இருக்கி றதோ தெரியாது. மன்னார் பன்றிவிரிச்சான் தான் என் மனைவியின் ஊர். இங்கே அதிகமானோர் வேட்டைக்கு போய் காட்டு விலங்குகளை கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு நாள் எனது மனைவி காட்டுக் கோழி என்று சொல்லி தந்த இறைச்சியை சாப்பிட்டேன்.
ரொம்பவும் சுவையாக இரு ந்தது. அதன் பிறகு எனக்கு வேட்டையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பன்றிவிரிச்சானில் வேட் டைக்காரர்களாக இருந்த செல்லையா, மார்சலின், சின்னதம்பி, யோசப் ஆகியோருடன் சேர்ந்து நானும் வேட்டைக்கு போனேன். அப்போது விவ சாய நிலம் உள்ளவங்களு க்கு அரச அனுமதியோடு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அப் போது துப்பாக்கி ஒன்றை 250 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். மன்னார் கச்சேரிக்கு பக்கத்திலுள்ள அயன் ஸ்டோரில்தான் தோட்டா வாங்குவோம்.
ஒரு தோட்ட முப்பத்தைந்து சதம். ஒரு நாள் நானே காட்டுக் கோழியை வேட்டையாடி என் மனைவியிடம் சமைக்கச் சொன்னேன். ஆனால் ருசியில் சிறிது மாற்றம் இருந்தது. அப்போதுதான் என் மனைவி, ‘நீங்கள் அன்றைக்கு சாப்பிட்டது உடும்பு இறைச்சி. காட்டுக் கோழி என்று சொல்லி சாப்பிட வைத்தேன். உடும்பு என்றால் நீங்கள் சாப்பிட மாட்டீங்களே? என்றாள் என்னிடம். என்று அனுபவங்களை அவிழ்த்து விட்டவர் இன்னொரு தகவலையும் எடுத்து வைத்தார்.
“சின்ன வயதில் எனக்கு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கு வைத்தியர் வருவார். அவர் பெயர் (சிறிதுநேரம் யோசித்து விட்டு) இலுவல் சேட் பரியாரியார். அவரை எனக்கு நல்லாத் தெரியும் மருந்து பெட்டியுடன் சைக்கிளில் தான் வருவார். அவரோட உயரம் ஆறு அடி இருக்கும் இதேபோல் புங்குடுதீவில் ரொம்பவும் பெயர் பெற்றவர், சண்டியன் சண்முகநாதன் அவரை நான் கண்டதே இல்லை. கேள்வி பட்டிருக்கிறேன். அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைச்சேன். ஆனால் கைகூடவில்லை. பிறகு நான் கொழும்புக்கு வந்து விட்டேன். புங்குடுதீவு வாழ்க்கை முடிந்த கதையாகி விட்டது.
இங்கே கொழும்பு துறைமுகத்தில் நான் வேலை பார்த்த போது கம்பஹா-தொம்பேயில் குடும்பத்துடன் ஒரு ஆறுவருடம் தங்கியிருந்தேன். தினமும் கொழும்பிலிருந்து வீட்டுக்கு போய் வருவேன். பின்னேரம் வேலை முடிந்து தொம்பேக்கு போய் இறங்கும் போது இரவு பத்து மணியாகிவிடும். எனக்கு தினமும் மது அருந்த வேண்டும்.
அந்த சந்தியில் ஒரு குடிசை வீட்டில் புஞ்சி நோனா என்ற அம்மா மது விற்று வந்தாள். வழமையாக அங்கே சென்று ஒரு கிளாஸ் போட்டுவிட்டுதான் மேலே நடப்பேன். அந்த அம்மாவின் மகனான சோமசந்திர எனக்கு நண்பரானார். அதன் பிறகு அர்த்த ராத்திரியில் அந்த குடிசைக்கு சென்றாலும் எனக்காக அங்கே ஒரு கிளாஸ் மது இருக்கும். இப்போது அக்குடிசையை அங்கே காணவில்லை. புஞ்சி நோனாவும், சரத் சந்திரவும் எங்கே போனார்களோ தெரியவில்லை” என்கிறார்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள்?
“நீர்கொழும்பு முத்துலிங்கம், கிங்ஸ்லி செல்லையா என்கிறார் கலைஞர் உதயகுமார். கடவுள் நம்பிக்கை- எப்படி என்றதும் நம்ம குல தெய்வம் மகா விஷ்ணு என்றார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மைக்கல் உதயகுமாராகி, இப்போது குல தெய்வம் மகாவிஷ்ணுவாகி....
வாழ்க்கையை நீங்கள் அப்படி பார்க்கிaர்கள் உதயகுமார்?
திரும்பிப் பார்க்கும்போது நினைவாக இருக்கிறது. ஆரம்பத்தில் என்னுடன் கலைப்பயணத்தில் பலர் வந்தார்கள். இப்போது இவர்களில் பலர் இல்லை. அனாலும் நான் வெறுமை யாககஇல்லை. கலைச் சேவை பசுமையாக இருக்கி றது. பல சிரமங்களுக்கு மத்தியில் பல வேலைக ளைச் செய்து முடித்திருக் கிறேன். பாரதியார் காலத்தில் எத்தனைப் பேருக்கு பாரதி யைத் தெரியும்? ஆனால் இன்று தமிழ் வீரியத்தின் மங்காதச் சின்னம் அவர். இதுபோல் நானும் எனக்கு பின்னர் வாழ்வேன் என்ற நம்பிக்கை திரும்பவும் என க்கு நிறைவைத் தருகிறது.....
Nothing to worry......
thanks to pungudutivu.info
I really love your work it’s very beneficial to many people’s. Your blog approach helps many people like myself. Its content is very easy to understand and helps a lot,
AntwortenLöschenDo visit my site for new and Updated software:
Temperature Gauge Pro Crack
Cocktail Mac Crack
Grids for Instagram Crack Mac Crack
VMware Fusion Mac Crack
ActivePresenter Crack
Artweaver Plus crack
Duplicate Photo Cleaner crack
WebcamMax Crack
Airy crack